அலெப்போ போர் முடிந்தது

சிரியா நகரான, அலெப்போவைக் கைப்பற்ற நான்காண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலெப்போ போர் முடிந்தது

நகரில் எஞ்சியிருந்த கிளர்ச்சிப் போராளிகள் நகரை விட்டு வெளியேற அனுமதிக்க போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த சில மணி நேரங்களாக அங்கு மோதல்கள் நடக்கவில்லை என்று நகரவாசிகள் கூறுகின்றனர்.

ராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது என்று ரஷ்யா கூறியிருக்கிறது.

சிரியா படைகள் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி சில பகுதிகளையும் தம் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கின்றன என்று ரஷ்யா கூறுகிறது.

வரும் சில மணி நேரங்களில்,கடுமையாக காயமடைந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரை போர்ப்பகுதியிலிருந்து வெளியே கொண்டு செல்ல பேருந்துகள் பயன்படுத்தப்படும்.

அலெப்போ நகருக்கான போரினால் ஏற்பட்ட மனித உயிர்ச்சேதம் மிக அதிகமாக இருந்துள்ளது. கிழக்கு அலெப்போ நகரின் பெரும்பகுதி இடிந்து தரைமட்டமாகிவிட்டது.