கடலில் தவித்த வட கொரிய மீனவர்களை மீட்ட தென் கொரிய கடலோரப் பாதுகாப்புப் படை

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த எட்டு வட கொரிய மீனவர்களை தென் கொரிய கடலோரப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். அதில் சிலர் பட்டினியின் விளிம்பில் இருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சுமார் இரண்டு மாதங்களாக, அந்த எட்டு மீனவர்களும் உடைந்து போன மூன்று தனித்தனி கப்பல்களில் இருந்தனர்.

அந்த மீனவர்கள் குழுவில் குறைந்தது ஒரு நபர் பட்டினியால் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட வட கொரிய மீனவர்கள் தங்களது நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக நம்பப்படுகிறது. ஆனால் தென் கொரிய அதிகாரிகள் வட கொரிய அரசை தொடர்பு கொள்வதில் பிரச்சனை உள்ளதாக கூறியுள்ளனர்.