ஆளில்லா விமானம் மூலம் முதல் டெலிவரியை செய்தது அமேசான்

ஐக்கிய ராஜ்ஜியத்தில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், சில்லரை வணிகத்தில் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், பொருள் ஒன்றை முதன் முதலாக வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை அமேசான்
Image caption ஆளில்லா விமானம் மூலம் முதல் டெலிவரியை செய்தது அமேசான்

அமேசான் தளத்தில் பொருளை ஆர்டர் செய்து 13 நிமிடங்களில் கேம்பிரிட்ஜில் உள்ள முகவரிக்கு அந்த பொருள் வாடிக்கையாளரிடம் பத்திரமாக ட்ரோன் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

சுமார் 400 அடி உயரம் வரை மின் ஆற்றலில் பறக்கக்கூடிய ட்ரோன் ஒன்று எவ்வாறு இந்த பொருளை உரியவரிடம் கொண்டு சேர்த்தது என்பதை ஒரு வீடியோ காட்டுகிறது.

அமேசான் விமான சேவைக்கு சோதனைரீதியாக இது நடத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 7 ஆம் தேதி இந்த டெலிவரி நடைபெற்ற நிலையில், டிசம்பர் 14 ஆம் தேதிதான் அமேசான் இதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ட்ரோன்கள் தன்னிச்சையாக தரையிலிருந்து மேலெழும்பவும், வானில் பறப்பதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜிபிஎஸ் மூலம் அடைய வேண்டிய இலக்கை சரியாக இந்த ட்ரோன்கள் சென்றடைகின்றன.

இந்த ட்ரோன்கள் 2.7 கிலோ கிராம் வரையிலான எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் படைத்தவை.

தொடர்புடைய தலைப்புகள்