கடனை ஒரு நூற்றாண்டாக "ரம்" மதுவாக திருப்பி வழங்க எண்ணும் கியூபா

  • 16 டிசம்பர் 2016

செக் குடியரசுக்கு செலுத்த வேண்டிய பல மில்லியன் டாலர் கடனை கியூபா, நாட்டில் அதிகமாக தயாரிக்கப்படும் "ரம்" மதுபானத்தை கொடுத்து அசாதாரண முறையில் திருப்பிச் செலுத்தும் வழிமுறையை பின்பற்றத் திட்டமிட்டுள்ளதாக செக் குடியரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்தப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தையில், இதற்கு சாத்தியமாகும் வழிமுறையை கியூபா எழுப்பியதாக செக் குடியரசின் நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

செக் குடியரசுக்கு 276 மில்லியன் டாலர் கடனை கியூபா வழங்க வேண்டியிருக்கிறது.

கியூபா முன்மொழிந்திருக்கும் இந்த வழிமுறை ஏற்றுகொள்ளப்பட்டால், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக கியூபா ரம் மதுவை செக் குடியரசுக்கு கொடுத்து கடனை அடைக்க வேண்டியிருக்கும்.

இருப்பினும், கடனில் சிறிதளவாவது ரொக்கமாகமாக்க் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று செக் குடியரசு விரும்புகிறது.

கியூபாவும், செக்கோஸ்லோவாக்கியாவும், கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்பட்ட நாடுகளின் பகுதிகளாக இருந்த பனிப்போர் காலத்தில் இருந்தே இந்தக் கடன் இருந்து வருகிறது.

தற்போது அதிக பணமில்லாத கியூபா, "ரம்" மதுபானத்தை அதிகமாகத் தயாரிக்கிறது. எனவே, இது கடன் திரும்ப செலுத்துகிற அசாதராண வழிமுறை என்று தலைநகர் பராகுவேயில் இருக்கின்ற பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

"ரம்" அல்லது மருந்து பொருட்கள் மூலம் இந்த கடன் தொகையை கியூபா திரும்ப செலுத்தும் சாத்தியக்கூறு உள்ளதாக செக் குடியரசின் நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், கியூபாவின் மருந்துகள் ஐரோப்பிய ஒன்றிய சான்றிதழ் பெறாதவை. எனவே, செக் குடியரசின் பிரபலமான பாரம்பரிய மருந்துகளை வழங்கி கடன்களை திரும்ப செலுத்துவது எளிதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்