பர்கினோ ஃபேசோவில் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் 11 பாதுகாப்புப் படையினர் கொலை

மாலி உடனான எல்லைப்பகுதிக்கு அருகே 11 பாதுகாப்புப் படையினர் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாக பர்கினோ ஃபேசோ ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பர்கினோ ஃபேசோவில் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் 11 பாதுகாப்புப் படையினர் கொலை

ராணுவ முகாம் ஒன்றில் சுமார் 40 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருப்பு கொடிகளை அசைத்தபடி தீவிரவாதிகள் லாரிகளிலும், மோட்டார் பைக்குகளிலும் வந்துள்ளனர்.

மாலி உடனான பர்கினோ ஃபாசோவின் நீண்ட மற்றும் நுண்ணிய எல்லைப்பகுதியை பாதுகாக்க படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினர் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்