ஃபார்க் அமைதி உடன்படிக்கை : போப்பை சந்தித்த கொலம்பியாவின் இரு துருவங்கள்

ஃபார்க் போராளிகள் உடனான அமைதி உடன்படிக்கை குறித்து விவாதிக்க கொலம்பிய அதிபர் குவான் மானுவேல் சாண்டோஸ் மற்றும் முன்னாள் அதிபர் ஆல்வரோ ஊரிபே ஆகியோர் போப் ஆண்டவரை சந்தித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போப்பை சந்தித்த முன்னாள் அதிபர் ஊரிபே மற்றும் தற்போதைய அதிபர் குவான் மானுவேல் சாண்டோஸ்

இந்த உடன்படிக்கையை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை வழிநடத்தியவர் ஊரிபே. ஆனால், அது குவானுக்கு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுத் தந்தது.

கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கொலம்பியர்களால் இந்த உடன்படிக்கை நிராகரிப்பட்டது.

மறு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மறுசீரமைக்கப்பட்ட ஒப்பந்தமானது கொலம்பிய நாடாளுமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இது போராளிகளுக்கு அதிக சலுகை காட்டுவதாக குற்றம் சாட்டும் ஊரிபே இதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்