மாலியின் முன்னாள் அதிபர் மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன

மாலியின் முன்னாள் அதிபர் அமடூ டூமாணி டூரே மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்களை அந்நாட்டு நாடாளுமன்றம் கைவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை JUAN BARRETO
Image caption அமடூ டூமாணி டூரே

ஏ.டி.டி என்று பரவலாக அறியப்பட்ட அமடூ டூமாணி டூரே , 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியில் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.

நாட்டின் வடக்கே இருந்த போராளிகளை தோற்கடிக்க அதிபராக இருந்த டூரி ராணுவத்திற்கு வழிவிடாதது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து நாடாளுமன்ற ஆணையம் ஒன்று விசாரித்து வந்தது.

அமடூ டூமாணி டூரே மீதான பல வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றதிலிருந்து செனிகலில் தஞ்சம் அடைந்திருந்தார் அமடூ டூமாணி டூரே.