உயர் மதிப்பு நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவை ஒத்தி வைத்தது வெனிசுவேலா

  • 18 டிசம்பர் 2016

வெனிசுவேலா நாட்டின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டான நூறு போலிவரை திரும்பப் பெறும் திட்டத்தை ஜனவரி மாதம் வரை ஒத்தி வைத்திருப்பதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பரவலான போராட்டங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களுக்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உரிய நேரத்தில் புதிய உயர் மதிப்பு கரண்ஸி நோட்டுக்கள் வருவதை தடுக்கும் சர்வதேச சதியால், தனது நாடு பாதிக்கப்பட்டுள்ளாதாக தேசிய ஒளிபரப்பு ஒன்றில் மதுரொ தெரிவித்தார்.

கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கு அந்த மாற்றம் தேவை என அரசு அறிவித்திருந்ததையடுத்து, வெனிசுவேலாவின் மக்கள் தங்கள் கையில் உள்ள பழைய நோட்டுக்களை கொடுக்கவும் அல்லது மாற்றிக் கொள்ளவும் பல நாட்களாக வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் பணப் பற்றாற்குறை காரணமாக ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன; மேலும் மக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

வெனிசுவேலா: கடத்தலை ஒழிக்க ரூபாய் நோட்டுக்களை நாணயங்களாக மாற்றப்போவதாக அறிவிப்பு