போலந்தில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம்: பிரதமர் கண்டனம்

போலந்து நாட்டில் ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதாக அரசின் மீது குற்றம் சுமத்தி, எதிர்தரப்பு ஆர்வலர்கள் நடத்தும் போராட்டத்தை பிரதமர் பேயட்ட ஷிட்வொ வன்மையாக கண்டித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரதமர் பேயட்ட ஷிட்வொ

போராட்டங்களை நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு; ஆனால் எதிர்தர்ப்பினரின் அந்த போராட்டம் முறையற்றது என்று தெரிவித்துள்ளார்.

தலைநகர் வார்சா உட்பட பல நகரங்களில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் இரண்டாம் நாளாக நடைபெற்றன; ஆயிரக்கணக்கானவர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகள் மற்றும் "சுதந்திர ஊடகம்" என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை அசைத்தனர்.

நாடாளுமன்ற நடப்புகளை ஒளிப்பரப்ப அனுமதிக்கப்பட்டுள்ள ஊடங்கங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை அரசு அறிமுகப்படுத்துகிறது.