காம்பியாவின் புதிய அதிபர்: மேற்கு ஆப்ரிக்க தலைவர்கள் தொடர்ந்து சமரச முயற்சி

காம்பியாவில் இந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றும், பதவி ஏற்பதிலிருந்து தடுக்கப்படும் எதிர்கட்சி தலைவர் ஆடம்மா பாரோவின் பாதுகாப்பிற்கு மேற்கு ஆப்ரிக்க தலைவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்கட்சி தலைவர் ஆடம்மா பாரோ

தற்போது பதவியிலிருக்கும் யாயா ஜம்மே, அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.

அபுஜாவில் நடந்த சந்திப்பில், மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், காம்பியாவில் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள பாரோவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

இரண்டு மேற்கு ஆப்ரிக்க தலைவர்கள், நைஜீரியாவின் அதிபர் முகமத் புகாரி மற்றும் கானாவின் தற்போதைய அதிபர் ஜான் மஹமா ஆகியோர் பாராவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நெருக்கடிக்கு மத்தியஸ்தம் செய்யவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.