ஏமனில் தற்கொலை குண்டு தாக்குதலில் 40 சிப்பாய்கள் பலி

ஏமனின் தெற்கு துறைமுகத்தில், தற்கொலை குண்டு தாக்குதல்தாரியால் குறைந்தது நாற்பது சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

மேலும் பலர் காயமடைந்துள்ளனர்; ராணுவ தளத்திற்கு அருகில் தங்களது ஊதியத்தை வாங்க வரிசையில் நின்ற சிப்பாய்களை குறி வைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏமனில் ராணுவத்தினரை குறி வைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதலில் இது சமீபத்திய ஒன்றாகும்.

ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஏடனில் சர்வதேச ரீதியில் அங்கீரிக்கப்பட்ட ஏமன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 50 படைகளை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.