மியன்மார் - கடும் சண்டையில் முக்கிய இடத்தை மீட்டது ராணுவம்

  • 18 டிசம்பர் 2016

மியன்மாரின் வடக்கு பகுதியிலுள்ள முக்கிய சோதனைச்சாலை சாவடி நிலையத்தில் நிகழ்ந்த கடும் சண்டைக்கு பின்னர், அவ்விடத்தை கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து அரசு படைப்பிரிவுகள் தங்கள். கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

கிடோன் புறச் சாவடி நிலையத்தை பிடிப்பதற்கு நடைபெற்ற இந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கிளர்ச்சிப்படையினர் அதனை மீண்டும் கைப்பற்ற முயன்று வருகின்றனர்.

காச்சினில் மீண்டும் சண்டை தொடங்கியிருப்பதை அடுத்து, பொது மக்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.

மியன்மார் ராணுவத்திற்கும், பல்வேறு கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இடையில் அமைதி உடன்பாட்டை கையெழுத்திட ஆங் சாங் சூச்சியின் அரசு எடுத்து வருகின்ற முயற்சிகளுக்கு இந்த வன்முறைகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்