இராக்கில் அரசு ஆதரவு ஆயுதக் குழு மனித உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டு

இராக்கில் அரசு ஆதரவுப்பெற்ற ஆயுதக் குழு ஒன்று , ஐ.எஸ் குழுவுக்கு ஆதரவாக சண்டையில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நான்கு கைதிகளை எவ்வித விசாரணைகளுமின்றி கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இராக்கில் அரசு ஆதரவு ஆயுதக் குழு மனித உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டு

இராக் பாதுகாப்பு படைகள் முன்னிலையில் இந்த ஆண்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்கள் இதனை தடுக்கவில்லை என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மொசூல் அருகே ஐ.எஸ் போராளிகளை விரட்டும் பணியில் இராக்கிய படைகள் ஈடுபட்டிருந்த போது, இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

பழங்குடியின ஆயுதக் குழுக்கள் குறித்து எந்த புகார்களும் இதுவரை தான் பெறவில்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்