ஜோர்டன் சுற்றுலாத் தளத்தில் துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொலை

ஜோர்டனின் வரலாற்று நகரான கர்ரக்கில் ஆயுத்தாரிகளின் முற்றுகை முடிவுக்கு வந்தது என பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

புகழ்பெற்ற சுற்றுலாதளமான கர்ரக் சிலுவைப் போர் சகாப்த கோட்டையிலிருந்து நான்கு துப்பாக்கிதாரிகளை வெளியேற்றி பாதுகாப்பு படையினர் அவர்களை சுட்டுக் கொன்றனர் என செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் நகர் முழுவதும் தாக்குதல் நடத்தியதில் கனடா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்

அவர்களிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தற்கொலை குண்டு ஆடைகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.