மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் நிலை குறித்து விவாதிக்க ஆசியான் அமைச்சர்கள் மாநாடு

மியான்மாரில் சிறுபான்மையினரோஹிஞ்சா முஸ்லிம் மக்களின் அவல நிலை குறித்து விவாதிக்க பர்மிய தலைவர் ஆங் சாங் சூ கி, ஆசியான் எனப்படும் தென் கிழக்குஆசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கு கொள்ளும் கூட்டத்தை கூட்டுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரோஹிஞ்சா இன மக்களுக்கு எதிராக பர்மிய ராணுவத்தினர் அட்டூழியங்கள் செய்வதாக, அண்டை நாடுகளால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களால் மியான்மார் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

அது ஓர் இனப்படுகொலை என மலேசியா தெரிவித்துள்ளது.

ஆசியான் மாநாட்டில் உறுப்பு நாடு ஒன்றின் உள்நாட்டு விவகாரத்தை விவாதிப்பது மிகவும் அரிதானது என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பர்மிய ராணுவத்தின் நடவடிக்கைகள் மனித நேயத்திற்கு எதிராக உள்ளன என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எச்சரித்துள்ளது.