முடமாகிப் போன வெனிசுவேலா கரன்ஸி: முட்டை வாங்கவும் மூட்டை மூட்டையாக பணம் தேவை

வெனிசுவேலாவில் புழக்கத்தில் இருக்கும் உயர் மதிப்பு கொண்ட பண நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக கடந்த வாரம் அந்நாடு அறிவித்தது.அதன் விளைவாக தங்களிடம் இருக்கும் பண நோட்டுக்கள் செல்லா நோட்டுக்கள் ஆகிவிடுவதற்கு முன்பாக அவற்றை வங்கிகளில் மாற்றிவிட மக்கள் குவிந்ததால், அனைத்து வங்கிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக இருந்தது.

எனவே, 100 போலிவார் பணநோட்டை திரும்ப பெறுகின்ற முடிவு ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உயரும் விலைவாசி மற்றும் நாணய மதிப்பு குறைவாலும், அதிகரிக்கும் மதிப்பு குறைந்த பணநோட்டுக்களாலும் சாதாரண மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அது பற்றி, அங்கு நேரடியாகப் பயணம் செய்து கள நிலவரத்தைக் கண்ட கிதயோன் லாங் விவரித்திருப்பதை உங்களுக்கு வழங்குகின்றோம்.

இந்தியாவில் அதிக மதிப்புமிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 9 ஆம் நாள் முதல் செல்லாது என்று முந்தைய நாள் இரவு 8 மணியிளவில் இந்திய பிரதர் நரேந்திர மோதி திடீரென அநிவித்தார்.

அடுத்த நாள் முதல் இந்திய வங்கிகளின் முன்னாலும் இதே போன்ற நீண்ட வரிசைகளை காண முடிந்தது. இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த பிரச்சனை காரணமாக, இந்தியாவின் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் முற்றிலுமாக எதிர்கட்சிகளால் முடக்கப்பட்டு எந்தவொரு முக்கிய முடிவுகளும் எடுக்கப்படாமல் நிறைவடைந்துள்ளது.

சரியான திட்டமிடுதல், முன்னேற்பாடுகள், பணம் வழங்கும் இயந்திரங்களை சீரமைக்கப்படாமல் இதனை மேற்கொண்டிருப்பது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது,

இது போன்ற நிலைமையால் வெனிசுவேலாவில் நடப்பது என்ன என்று பார்ப்போமா?

படத்தின் காப்புரிமை Reuters

"உங்களுடைய பணத்தை மாற்றிவிட்டீர்களா?" என்று காக்கஸஸில் கிதயோன் லாங் போன முதல் நாள் மாலையில் அவருடைய நண்பர்கள் கேட்டுள்ளனர்.

அவர் "இல்லை" என்று சொன்னவுடன் "நல்லது. மாற்றவிடாதே. அதிகாரப்பூர்வ பரிவர்த்தனை மாற்றம் வேண்டாம். உங்களுடைய டாலரை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் உங்களுக்காக மாற்றி தருகிறோம்" என்று கூறியுள்ளனர்.

கிதயோன் லாங் 100 டாலரை அவர்களிடம் வழங்கியிருக்கிறார். அடுத்த நாள் அவர் இரண்டு பெரிய குவியல் பணநோட்டுக்களை பெற்றிருக்கிறார். மிக அதிக பணநோட்டுக்கள் என்பதை தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு குவியலிலும் 2 லட்சம் போலிவார் நோட்டுக்கள் இருந்தன. அதனை பார்த்தவுடன் லாட்டரி ஒன்றில் வெற்றிபெற்ற உணர்வை பெற்றதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதில், பாதிக்கப்படுவோர் வெனிசுவேலாவை சேர்ந்தவர்கள் தான். அவர்களுடைய ஊதியங்களின் மதிப்பு ஒவ்வொரு விநாடியும் குறைகிறது. பற்றாகுறையாக இருக்கும் உணவு பொருட்களை பல மணிநேரங்கள் வரிசையில் நின்று கொண்டு வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது,

படத்தின் காப்புரிமை EPA

சர்வதேச அளவில் பொருட்களை வாங்குவதற்கு முன்பு புகழ்பெற்றிருந்த கச்சா எண்ணெய் அதிகமாகவுள்ள நாடாக இருந்த வெளிசுவேலாவில் வாழும் பொது மக்கள் இவை எல்லாவற்றையும் இன்று அனுபவித்து வருகின்றனர். அங்குள்ள நிலைமை மிகவும் குழப்பமாக உள்ளது.

பண பரிவர்த்தனையில் 3 வரையறைகள்

வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்களான உணவு மற்றும் மருந்துக்களை இறக்குமதி செய்வதாக இருந்தாலோ அல்லது அரசு பதவிகளில் நல்ல மனிதரை அறிந்திருந்தாலோ பேரம்பேசி அரசின் கட்டுப்பாட்டு விலையில் 10 போலிவாரை ஒரு டாலருக்கு பெறலாம்.

அடுத்தாக, பிறர் அனைவருமே அரசு கட்டுப்பாட்டு இரண்டாவது விலையான ஒரு டாலருக்கு 670 போலிவார் பெறலாம்.

ஆனால், அங்குள்ள இன்னுமோர் உண்மையான உலகு, அதாவது கறுப்புப்பண சந்தையில் ஒரு டாலருக்கு இணையான வெனிசுவேலா நாணய அளவானது சமீபத்திய வாரங்களில் மிகவும் சரிந்துள்ளது..

அக்டோபர் மாதத்தில் ஒரு டாலருக்கு 1,500 போலிவார் கிடைத்தது. நவம்பர் இறுதிக்குள் அதுவே 4 ஆயிரமாக மாறியிருந்தது.

அதன் பிறகு வெனிசுவேலா நாயணம் சற்று வலுப்பட்டாலும், இரண்டொரு மாதத்தில், கறுப்பு சந்தையில் அதனுடைய மதிப்பில் பாதியை இழந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

கிதயோன் லாங்கிற்கு கிடைத்த இரண்டு குவியில் பண நோட்டுக்கள் 100 டாலருக்கு சம்மானவை. இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டபோது, அந்த அளவு பணநோட்டுக்கள் 50 டாலருக்கே கிடைத்தன.

மிகவும் அதிக பணப்புழக்கத்தில் இருக்கும் 100 போலிவார் நோட்டு அமெரிக்காவின் இரண்டு சென்டுகளுக்கு தான் சமம். எனவே, ஒரு காஃபி குடிக்கவோ, சாப்பிடவோ வெளியே செல்லும்போது, சாக்குப்பை நிறைய பணநோட்டுக்களை தான் எடுத்து செல்ல வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு முட்டை வாங்கக் கூட மூட்டை மூட்டையாகப் பணம் தேவை.

வாழ்க்கையை சற்று எளிமையாக்க மேலதிக உயர் மதிப்புடைய பணநோட்டுக்களையும், வெள்ளி நாயணங்களையும் வெனிசுவேலா மத்திய வங்கி அச்சடித்து வழங்கி வருகிறது. ஆனால், அந்த முயற்சியும் வேறுபட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.

பணநோட்டுக்கள் மிகவும் மதிப்பு குறைந்துள்ளதால், பணம் வைக்கப்படும் எந்திரங்களும் சமாளிக்க முடியாத நிலையில் உள்ளன.

சில டாலர்களுக்கு இணையான மதிப்புடைய பணத்தை மட்டுமே இந்த பணம் வழங்கும் எந்திரங்களால் வழங்க முடிகிறது.

இந்த ஏடிஎம் எந்திரங்கள் பழுதடைந்திருந்தால் மட்டுமன்றி, எல்லா ஏடிஎம் இயந்திரங்களின் முன்னாலும் எப்போதும் மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

" பணம் வழங்கும் எந்திரத்திடம் இருந்து பணத்தை எடுத்து கொண்டிருக்கும்போதோ, "நான் ஒவ்வொரு நாளும் இங்கே பணம் எடுக்க வருகிறேன்" என்று வெள்ளை டிசர்ட்டும், சிவப்பு மென்பந்து தொப்பியும் அணிந்திருக்கும் ராமிரோ தெரிவிக்கிறார்,

"பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுகொள்வதற்காக மட்டுமே பல மணிநேரங்கள் நாங்கள் வரிசையில் நின்று கொண்டு வீணடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறு வங்கிகளுக்கு முன்பும், ஏடிஎம் எந்திரங்களின் முன்பும் நீண்ட வரிசையை இந்தியாவிலும் நாம் கடந்த சில வாரங்களாக பார்த்து கொண்டிருக்கிறோம்.

பணம் இருக்கும் ஏடிஎம்களுக்கு முன்னால் நள்ளிரவு என்று கூட பார்க்காமல் மக்கள் பல மணிநேரம் நேரத்தை கழித்து வருவது அவர்களுடைய உழைப்பாற்றலை வீணாக்குவதை தான் எடுத்து காட்டுக்கிறது.

வெனிசுவேலாவில் பணநோட்டுக்கள் கையில் இருந்தாலும், விரும்பியதை வாங்கி உண்ண முடியாத நிலை தான் உள்ளது.

சில இன்றியமையாத உணவு பொருட்களான அரிசி, மாவு, சமையல் எண்ணெய் ஆகியவை அரசு கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படுகிறது. அவற்றை வாங்க முடிகிறது. ஆனால், இவற்றின் வினியோகம் மிகவும் பற்றாகுறையாக உள்ளது.

இவற்றை சில நாட்களில் மட்டுமே நீங்கள் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. இது நாடு அளவில் வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

"திங்கள்கிழமை என்னுடைய நாள்" என்கிறார் மறைந்த வெனிசுவேலா அதிபர் கூவோ சாவேஸின் தோற்றத்தை கொண்டிருக்கும் மிக பெரிய மனிதரும், வாடகை கார் ஓட்டுநருமான அலெக்ஸாண்டர்.

"ஒவ்வாரு வாரமும் திங்கள் கிழமை நான் வணிக அங்காடிக்கு செல்கிறேன். அப்படி இருந்தும் அங்கு வாங்குவதற்கு பொருட்கள் சரியாக இருப்பதில்லை" என்ற அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை EPA

வெனிசுவேலாவில் நிலவும் பணவீக்க விகிதம் யாருக்கும் தெரியாது. அரசு அதனை இப்போது வெளியிடுவதில்லை. கடந்த ஆண்டு இது 180 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டு அது 500 சதவீதமாக இருக்கலாம் என்று சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஒட்டு மொத்த வளாச்சி 10 சதவீதம் குறைந்துள்ளது. இப்படிபட்ட ஒரு பொருளாதாரம் எவ்வாறு இருந்து வருகிறது என்பதை பார்ப்பதற்கே கடினமாக உள்ளது.

வெனிசுவேலாவின் இந்த நிலைமைக்கு வீழ்ச்சியடைந்திருக்கும் எண்ணெய் விலையையும், இந்த பொருளாதாரத்தை நலிவடைய செய்ய மறைமுகமாக அமெரிக்கா தலைமையிலான சதியும் காரணம் என அரசு கூறி வருகிறது.

இது யார் குற்றம்?

ஏற்கெனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவை எல்லை கடந்த பண பரிமாற்றங்களால் மாஃபியா கும்பல் பெரிய அளவில் பாதிக்க செய்வதாக கடந்த வாரம் அதிபர் நிக்கொலாஸ் மாதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால், தன்னுடைய தீவிர தவறான மேலாண்மையால் வெனிசுவேலா இன்னல்களை அனுபவித்து வருவது தான் உண்மை. ஜிம்பாப்வே, அர்ஜென்டீனா, த வெய்மார் குடியரசு ஆகியவற்றின் வரலாறுகள், நாடுகள் தங்களுடைய பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கில் எப்போது பணத்தை அச்சடிக்கிறதோ அப்போது பொதுவாக நன்மையாக முடிவதையே காட்டுகின்றன.

காக்கஸஸ் தற்போது விழா கோலம் பூண்டுள்ளது. பனி கலைமான், பனி மனிதர், பனி பிரதேச இழுவை வண்டிகள் ஆகியவை அனைத்தும், நகரின் எளிதாக வளர்கின்ற, வெப்ப மண்டல நிலைமைக்கு மத்தியில் பொருத்தமற்றவையாக தெரிகின்றன.

தென் அமெரிக்க நாடுகளில் செல்வந்த நாடுகளில் ஒன்றாக இருந்த வெனிசுவேலாவில், தற்போது சில குடும்பங்கள் உண்மையிலேயே பட்டினியை எதிர்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான வளங்குன்றியிருக்கும் வெனிசுவேலா குடும்பங்களுக்கு இந்த கிறிஸ்து பிறப்பு விழா கடினமான ஒன்றாகவே இருக்கும்.

வெனிசுவேலாவில் இருந்து புறப்படுவதற்கான கிதயோன் லாங் காக்கஸஸ் விமானநிலையத்தில் காத்திருந்தபோது, உள்ளூர் செய்தித்தாளை திறந்தார். அதில் வெளியாகியிருந்த கேலி சித்திரத்தை பார்த்தார். அதிர்ச்சியடைந்த கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் நேரத்தில் தேவைப்படுகின்ற பொருட்களின் பட்டியலை வாசிப்பதை அது காட்டியது. அந்த பட்டியலில் இருந்தவை அனைத்தும் உணவு பொருட்கள் மட்டுமே.

கிறிஸ்மஸ் தாத்தா இதனை ஒரு மாந்திரீக உயிரினத்திடம் கூறுகிறார். மிகவும் கவலையடைந்த அந்த மாந்தரீக உயிரி கவலை தோய்ந்த முகத்தோடு கிறிஸ்துமஸ் தாத்தாவையே பார்க்கிறது.

இந்த பட்டியலில் வாசிக்கப்பட்டவை அனைத்தும் வெனிசுவேலாவுக்கு தேவையான பொருட்கள் என்று கிறிஸ்மஸ் தாத்தா அதினிடம் தெரிவிப்பதாக அந்த கேலி சித்திரம் அச்சிடப்பட்டிருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்