ரஷ்யாவில் ஆல்கஹால் கொண்ட குளியல் மருந்தை குடித்தவர்கள் 41 பேர் பலி

சைபீரிய நகரமான ஏர்கூட்ஸ்க்கில் ஆல்கஹால் கொண்ட குளியல் திரவத்தை குடித்ததை தொடர்ந்து குறைந்தது 41 பேர் பலியாகியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை DMITRY KOSTYUKOV
Image caption கோப்புப்படம்

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மற்றவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்..

அந்த பாட்டிலில் இது குடிப்பதற்கு உகந்த்தல்ல என தெளிவாக இருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் மிகவும் பொதுவானது. காரணம், சாதாரண மதுபானங்கள் இந்த மக்களுக்கு மிகவும் விலை உயர்ந்தவை.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான இறப்புகளில் இது கொடூரமானதாகும்.

நாட்டில் உட்கொள்ளப்பட்ட மொத்த ஆல்கஹாலில் 20 சதவிகிதம் மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்கள் என்று கடந்த மாதம் ரஷ்ய துணை பிரதமர் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்