இரானில் தனிமனித உரிமை சார்ந்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தினார் அதிபர்

இரானில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும், சுதந்திரமாக பேசவதற்கும் மற்றும் ஒரு நியாயமான விசாரணையை எதிர்கொள்வதற்கும் வழியேற்படுத்தும் மசோதா ஒன்றை அந்நாட்டு அதிபர் ஹசன் ருஹானி வெளியிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரானில் தனிமனித உரிமை சார்ந்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தினார் அதிபர் ஹசன் ருஹானி

நாட்டின் அரசியல் சாசனத்தில் இதுபோன்ற சட்டங்கள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த புதிய மசோதா முதல் முறையாக தெளிவான கொள்கைகளை பட்டியலிடுவதாகவும், அரசு நிறுவனங்களின் திறன்களை இதன் மூலம் அளவீடு செய்ய முடியும் என்றும் ருஹானி தெரிவித்துள்ளார்.

எனினும், நீதித்துறை போன்ற பல துறைகள் கடும்போக்குவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ருஹானிக்கு அவர்கள் பதில் சொல்லத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எதிர்ப்புக்களில் இருந்து இரானின் இஸ்லாமிய புரட்சியை பாதுகாப்பதே கடும்போக்குவாதிகளின் முதன்மை பணியாக இருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்