பெர்லின் தாக்குதலின் பின்னணி என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெர்லின் தாக்குதலின் பின்னணி என்ன?

பெர்லின் கிறிஸ்துமஸ் கடைத்தெருவில் நேற்றிரவு நடந்த தாக்குதலைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் ஜெர்மன் அரச தலைவி ஆங்கெலா மெர்க்கெல் கூறியுள்ளார்.

ஜெர்மன் தலைநகரின் மையப்பகுதியில் கூட்டத்திற்குள் லாரி ஏற்றப்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.

இது பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமே இல்லையென ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வந்ததாக கருதப்படும் நபரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் தனக்கு இதில் தொடர்பில்லையென அவர் மறுத்துள்ளார்.