லிபியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசுக்கு உதவிடும் நடவடிக்கைகள் நிறைவு: அமெரிக்க ராணுவம் அறிவிப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்படும் ஜிஹாதிகளை லிபியாவின் கடற்கரை நகரமான சிர்டேவில் இருந்து வெளியேற்றுவதற்கு, லிபிய படையினருக்கு உதவும் நடவடிக்கைகள் முடிந்து விட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்புப் படம்

இந்த பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் மீது கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து அமெரிக்க வானூர்திகள் மற்றும் போர் விமானங்கள் 500-க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது

சிர்டே நகரில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்து விட்டதாக, கடந்த சனிக்கிழமையன்று, லிபிய அரசு தெரிவித்தது.

சந்தேகத்திற்கிடமற்ற வகையில் பின்னடைவுகளை சந்தித்துள்ள போதிலும், இப்பகுதியில் உள்ள தீவிரவாதிகள் தங்கள் செயல்பாட்டில் இன்னமும் தீவிரமாகவே உள்ளனர்.

அண்மை சம்பவமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பெங்காஸி நகரில் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்