இந்தோனீசியாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்கள் இஸ்லாமியவாதிகளா?

இந்தோனீசிய தலைநகரான ஜகார்தாவின் அருகேயுள்ள தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கி சண்டையில், இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட மூன்று நபர்களை தாங்கள் கொன்றுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES
Image caption கோப்புப் படம்

இந்த மோதல் நடந்த போது, துப்பாக்கி சண்டை நடந்த வீட்டின் அருகேயுள்ள வீடுகளில் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், அந்த இடத்தில் இருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்க வெடிகுண்டு நிபுணர்கள் முயற்சிகள் மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த மாத துவக்கத்தில் இந்தோனீசிய அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட வேறொரு பயங்கரவாதிகள் குழுவுடன் இன்றைய துப்பாக்கி சண்டையில் இறந்துள்ளவர்களை போலீசார் இணைத்துள்ளனர்

தொடர்புடைய தலைப்புகள்