அலெப்போவில் எஞ்சியுள்ள மக்களை வெளியேற்றும் பணி மீண்டும் தொடக்கம்

கிழக்கு அலெப்போவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில்,எஞ்சியுள்ள மக்களை வெளியேற்றும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

கிளர்ச்சியாளர்களின் பகுதிக்கு வெளியே உள்ள சாலை சந்திப்பில் ஐந்து பேருந்துகள் புறப்படுவதை காட்டிய அரசு தொலைக்காட்சி, அந்த பேருந்துகள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது

மக்களை வெளியேற்றும் பணி மீண்டும் தொடங்கியதாக ஐ.நா அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 60 பேருந்துகள் கொண்ட தொடரணி மக்களை வெளியேற்றும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக பல மணி நேரம் காத்து கிடந்தது.

ஆனால், அதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. நான்கு வருடங்களாக நடந்த அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் சண்டைக்கு பிறகு, அலெப்போவின் முழு கட்டுப்பாட்டிற்காக சிரியா ராணுவத்தினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்