பெய்ஜிங்கில் நச்சுப்புகையின் அளவு குறைந்ததால் சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது

  • 22 டிசம்பர் 2016

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்குள்ள குடியிருப்பாளர்கள் மிகவும் அபாயகரமான அதிகளவிலான நச்சுப்புகையை எதிர்கொண்டிருந்த நிலையில், இரவு முழுவதும் வீசிய காற்றானது அதனை அகற்ற உதவிகரமாக இருந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் காரணமாக, பெய்ஜிங் நகர அரசாங்கம் விதித்திருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள், விமானங்கள் மற்றும் வாகன பயன்பாடு மீதான அவசர கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன.

மாசு மிக அதிகமாக இருந்தபோது பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

சமீபத்தில் 20க்கும் மேற்பட்ட நகரங்கள் இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தன.

இன்னும் வட சீனாவின் பிற பகுதிகளில் நச்சுப்புகையின் அளவு அதிகமாக பதிவாகி வருகிறது.

நச்சுப்புகை குறித்த பிற செய்திகள் :

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அச்சுறுத்தும் மாசு, எச்சரிக்கும் சீனா - திரு. லட்சுமணன் பேட்டி

பெய்ஜிங்கில் நச்சுப்புகை காரணமாக 5 நாட்களுக்கு அதி உயர் எச்சரிக்கை

தில்லியில் மாசு அளவை குறைக்க புதிய செயலி அறிமுகம்

தொடர்புடைய தலைப்புகள்