ஆஃப்கானிஸ்தானில் எம்.பிகளின் பேரக்குழந்தைகளை கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்

காபுலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு தாலிபன் தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர். இதில், குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஹெல்மண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மிர் வாலியின் வீட்டு வளாகத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்தது. அந்த தாக்குதலில் அவர் உயிர் தப்பித்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், அவருடையை பேரப்பிள்ளைகளில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கித்தாரிகள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதாக சம்பவ இடத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை மாலை மூன்று துப்பாக்கித்தாரிகள் தங்களுடைய தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர். அதில், குறைந்தது ஒரு தாக்குதல்தாரியாவது வீட்டிற்குள் வெடிப் பொருளை வெடிக்க வைத்திருக்கலாம் என்று டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், கந்தஹார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒபைதுல்லா பரிக்ஸாய்யின் 25 வயதுடைய மகனும் மற்றும் இரு பாதுகாப்பு படை உறுப்பினர்களும் அடங்குவார்கள்.

2016 ஆம் ஆண்டு முழுவதும் காபூலில் பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது