உயிரினங்களின் உணர்வுகளை பதிவு செய்யும் இந்தோனீஷிய கலைஞர் (காணொளி)

உயிரினங்களின் உணர்வுகளை பதிவு செய்யும் இந்தோனீஷிய கலைஞர் (காணொளி)

மொஹமத் ரோயம் இந்தோனீஷியாவை சேர்ந்த கத்துக்குட்டி புகைப்பட கலைஞர். இவர் எடுக்கும் புகைப்படங்களில், உயிரினங்களை மிக அருகில் பதிவு செய்திருக்கிறார்.

நடனமாடும் தவளைகளில் ஆரம்பித்து வேடிக்கையான பல்லி வரை, 28 வயதுடைய ரோயமின் கேமராவில் எதுவும் தப்பவில்லை.

முழு நேர செவியலராக பணியாற்றும் ரோயம் மூன்றாண்டுகளுக்கு முன்பு, பொழுது போக்கிற்காக புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினார்.

மொஹமத் ரோயமின் புகைப்படத் தொகுப்பை காண

தற்போது, பட்டமை சேர்ந்த இந்த கலைஞர், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் காட்டுப் பகுதிகளில் உயிரினங்களை படம் பிடிக்க துரத்திக் கொண்டிருப்பார்.

''பூச்சிகளின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாட்டை படம் பிடிக்க அதனை பின் தொடர்ந்து செல்வேன். சிலநேரங்களில் டஜன் கணக்கான புகைப்படங்களில் ஒன்று மட்டுமே நல்ல உணர்ச்சி வெளிப்பாட்டை கொண்டிருக்கும். மற்ற நாட்களில், எனக்கு எதுவும் கிடைக்காது'' என்று சொல்கிறார் பிபிசியிடம்.

''ஒரு விலங்கின் குறிப்பிட்ட பாகங்களை கூர்ந்து நோக்குவது பெரும்பாலோனருக்கு தெரிவதில்லை அல்லது அதில் ஆர்வம் காட்டுவதில்லை'' என்று கூறுகிறார் ரோயம். '' நான் விலங்கின் குறிப்பிட்ட ஒரு பகுதியை காட்ட முயற்சி செய்வேன். அதாவது உயிரினத்தின் கண்களை நீங்கள் பார்த்தால் அற்புதமாக இருக்கும்''.

''ஒரு புகைப்படம் எடுக்க எனக்கு ஒருநாள் ஆகும்'' என்கிறார் அவர்.