ரஷ்ய விஷச்சாராயம்: 60 பேர் பலி; 40 பேர் உயிர் ஊசல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஷ்ய விஷச்சாராயம்: 60 பேர் பலி; 40 பேர் உயிர் ஊசல்

சைபீரியாவில் அறுபது பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நாற்பதுபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். அதில் இருபதுபேர் உயிர் பிழைப்பது கடினம் என்கிறது ரஷ்ய சுகாதார அமைச்சகம்.

விஷத்தன்மை மிக்க மெத்தனால் கலந்த குளியல் திரவத்தை மாற்று மதுபானமாக வாங்கிக் குடித்தவர்களின் நிலைமை இது.

இந்த விஷசாராய உயிர்ப்பலிகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து, முறையான மதுபானங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் கூடுதல் சாராயம் கலந்த பானங்களை கட்டுப்படுத்தும்படி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.