தண்டுவட மரப்பு நோய்க்கு புதிய மருந்து: மூளை தாக்குதலைத் தடுக்கும்

  • 23 டிசம்பர் 2016
படத்தின் காப்புரிமை Getty Images

மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய மருந்தை மைல்கல் வளர்ச்சி என்று மருத்துவர்களும், தொண்டு நிறுவனங்களும் வர்ணித்துள்ளன.

மூளையின் சில பகுதிகளை நோய் எதிர்ப்பு அமைப்பு தாக்கி, ஒரு விரோத ஆக்கிரமைப்பை எதிர்கொள்வது போல மூளையை குழப்பிவிடுகிறது. இதனால், மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, மூளையிலிருந்து வரும் சமிக்கைஞகள் உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைய விடாமல் தடுக்கிறது. நடப்பதற்கு சிரமப்படுவது இதன் முக்கிய அறிகுறியாகக் கூறப்படுகிறது.

புதிய மருந்தான ஓக்ரீலிஸ்மப், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நரம்பு வழியாக செலுத்தப்படுகிறது. இது மூளை மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை வலுவிழக்க செய்து நோயின் முன்னேற்றத்தை தடுக்கிறது.

ஐரோப்பிய மருந்துகள் முகமை மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ஆகியை இந்த மருந்தை அனுமதிக்கலாமா என்பதை ஆய்வு செய்து வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்