கொடிய எபோலா வைரஸை விரட்ட பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி ஒன்று கண்டுபிடிப்பு

  • 23 டிசம்பர் 2016

கொடிய எபோலா வைரஸுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி ஒன்று மிகவும் பயனுள்ளதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எபோலா வைரஸுக்கு எதிராக பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி ஒன்று கண்டுபிடிப்பு

இந்த பரிசோதனையானது கினியாவில் நடத்தப்பட்டது.

இந்தாண்டு முடிவுக்கு வந்த திடீர் எபோலா பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளில் கினியாவும் ஒன்று.

பரிசோதனையின் முடிவுகள் `தி லேன்சட்' மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சுமார் 6 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், பத்து நாட்கள் கழித்து அவர்களுக்கு வைரஸ் மறைந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்காத அதே எண்ணிக்கையிலான நபர்களுக்கு பின்னர் சில வாரங்களில் எபோலா பாதிப்பு ஏற்பட்டது.

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான தி வெல்கம் டிரஸ்ட்டின் இயக்குநர் இந்த கண்டுபிடிப்புகளை குறிப்பிடத்தக்க சாதனை என்று தெரிவித்துள்ளார்.

'' முன்னர் எபோலா தீவிரமாக இருந்தபோது இந்த தடுப்பூசி இருந்திருந்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் '' என்று ஜெரீமி ஃபேரரார் தெரிவித்துள்ளார்.