கடத்தப்பட்ட லிபியா விமானத்திலிருந்து சில பயணிகள் விடுவிப்பு

  • 23 டிசம்பர் 2016
படத்தின் காப்புரிமை Reuters

லிபியாவில் இருந்து 118 பேருடன் கடத்தப்பட்ட விமானம், தற்போது மால்டா விான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் சில பயணிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், எத்தனை கடத்தல்காரர்கள் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மால்டா அதிகாரிகள் விமானி அறைக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது, சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்தக் கோரிக்கைகள் என்ன, அவை நிறைவேற்றப்பட்டதா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கடத்தப்பட்ட பயணிகள் விமானம் ( புகைப்படத் தொகுப்பு)

எனினும்,பெரும்பாலான பயணிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லிபியாவின் உள்நாட்டு சேவையான அந்த விமானம் கடத்தப்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் விமான உழியர்களும் இருந்தனர். 118 பேர் இருந்ததாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

ஏர்பஸ் ஏ 320 விமானம், ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது.

குண்டுவைத்து தகர்ப்பதாக மிரட்டல்

விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் சட்டவிரோத இடையூறு ஏற்பட்டிருப்பதாக மால்டா சர்வதேச விமான நிலையம், ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

அவசர கால படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பெருமளவிலான சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்