கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சாத்தியமானது எப்படி? ஜெர்மன் அரசு தீவிர விசாரணை

பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படும் துனீசிய நபருக்கு ஆதரவரான நபர்கள் இருந்தனரா என்பதை கண்டறிய ஜெர்மன் நாட்டு விசாரணை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அனிஸ் அம்ரி எவ்வாறு நாடுகடத்தப்படும் உத்தரவுகளைப் புறக்கணிக்க முடிந்தது என்றும் அவருக்கு தீவிர இஸ்லாமியவாத தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் இருந்த போதும், ஏன் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கண்காணிப்பதை நிறுத்தினர் என்றும் விசாரித்து வருகின்றனர்.

பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து

வெள்ளியன்று இத்தாலிய போலிசாரால் மிலன் நகரத்தில் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு, தீவிர தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்த போதும், அனிஸ் அம்ரி ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ய முடிந்தது.

12 நபர்கள் கொல்லப்பட்ட கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலை அடுத்துப் பேசிய ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தனது அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தும் என்று தெரிவித்தார்.