நைஜீரியாவில் இஸ்லாமியவாத தீவிரவாதிகளின் முக்கிய தளம் இப்போது ராணுவத்தின் பிடியில்

நைஜீரியாவில் போகோ ஹராம் இஸ்லாமியவாத தீவிரவாதிகளின் முக்கிய தளத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிபர் முகமது புஹாரி கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நைஜீரியாவில் இஸ்லாமியவாத தீவிரவாதிகளின் முக்கிய தளத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சம்பிஸா காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளின் கடைசி பதுங்கிடமாக இந்த முகாம் விளங்கி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த தீவிரவாத குழுவானது ஒளிந்து கொள்ள வேறு இடங்கள் இல்லை என்றும், அதன் உறுப்பினர்கள் பின் தொடரப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த ராணுவ நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் எந்த உறுதியான தகவலும் இல்லை.

முன்னர், இஸ்லாமியவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களிலிருந்து குறிப்பிடத்தக்க பகுதிகளை சமீப மாதங்களில் ராணுவம் கைப்பற்றியுள்ளது.

வடகிழக்கு நைஜீரியா மற்றும் அண்டை நாடுகளான நைஜர் மற்றும் கேமரூனில் இந்த குழுவானது தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்