தாக்குதல்தாரி அனிஸ் அம்ரிக்கு துனீசியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்பு

பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் கொடூரமான தாக்குதலை நிகழ்த்திய அனிஸ் அம்ரி தீவிரவாத குழுவுடன் தொடர்பில் இருந்ததை கண்டறிந்திருப்பதாக துனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption பெர்லின் தாக்குதல்தாரி அனிஸ் அம்ரி

இந்த குழுவானது மூன்று நபர்களைக் கொண்டிருந்ததாகவும், அதில் ஒருவர் அனிஸ் அம்ரியின் நெருங்கிய சகோதரர் என்றும் துனீஷில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த குழுவை சேர்ந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனிஸ் அம்ரி அவருடைய சகோதரரை ஊக்குவித்து, தன்னுடைய தீவிரவாத கொள்கைகளை பின்பற்றும்படி தூண்டியதாகவும், ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக உறுதிமொழி எடுக்க வைத்த்தாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெர்லின் சந்தைப்பகுதியில் அம்ரி லாரியை செலுத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, சம்பவ பகுதியிருந்து தப்பித்த அம்ரி தலைமறைவானார்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிலனில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.