ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் எஞ்சிய குண்டை தகர்க்க மக்கள் வெளியேற்றம்

  • 25 டிசம்பர் 2016

ஜெர்மனியின் தெற்கு நகரான ஆக்ஸ்பர்கில் இரண்டாம் உலகப் போரில் எஞ்சிய குண்டை தகர்க்க பல்லாரயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் கிறிஸ்துமஸ் தினத்தன்று தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் வெடிக்காத குண்டிற்காக, போர் காலத்திலிருந்து மக்கள் பெரிதாக வெளியேற்றப்பட்டது இதுவே முதல்முறை.

பிரிட்டன் படை வீசிய வெடிகுண்டு, பழைய நகரத்தை அழித்த கூட்டு வான் தாக்குதலில் மிஞ்சிய குண்டு என்று கருதப்படுகிறது.

பலர் தங்கள் நண்பர்களுடன் அல்லது குடும்பத்தின்ருடன் வசித்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர் ஆனால் பல பள்ளி மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறந்திருக்கும்.