சிலியில் பெரும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

  • 25 டிசம்பர் 2016
படத்தின் காப்புரிமை Reuters

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அதனை தொடர்ந்த சுனாமி எச்சரிக்கையால் சிலியின் தெற்கு கடற்கரை பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வுப்படி 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குவெலண்ட் துறைமுகத்திலிருந்து 40 கிமீ தென் மேற்கில் மையப்புள்ளி அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் 3மீ உயரம் வரை சுனாமி அலை வீசுவதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமாகியுள்ளதைக் காட்டுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்