இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் : கண்டனம் கூற அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுப்பு

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேறுவதற்கு அமெரிக்கா சுமூகமான பாதையை ஏற்படுத்தி கொடுத்ததாக அதிகரித்து வரும் சர்ச்சையை தொடர்ந்து அமெரிக்க தூதுவருக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக அவர் அந்நாட்டு பிரதமரால் வரவழைக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பையும் வகிக்கிறார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹூ, தன்னுடைய அலுவலகத்துக்கு டான் ஷபிரோவை அழைத்ததன் மூலம் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, தீர்மானம் ஒன்றில் வாக்களித்த நாடுகளின் தூதுவர்களை இஸ்ரேல் வரவழைத்து கண்டனம் தெரிவிக்க முடிவெடுத்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெறுகிறது.

ஐ.நாவின் செயல் வெட்கக்கேடானது என்று வர்ணித்து அதற்கு தக்க பதில் நடவடிக்கைகளை எடுப்பதாக இஸ்ரேல் உறுதிபூண்டதை தொடர்ந்து அதனிடமிருந்து இந்த கண்டனங்கள் வெளிவந்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து ஐ.நா தீர்மானம் ஒன்றை இயற்றியது.

அந்த தீர்மானத்தை அங்கீகரிக்கும் வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்து கொள்ளாததை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்