பிரிட்டிஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேலுக்கு ரசிகர்கள், கலைஞர்கள் அஞ்சலி
மாரடைப்பு காரணமாக, 53-வது வயதில் காலமான பிரிட்டிஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேலுக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1980களில் மிகவும் பிரபலமான பாப் டுயோ, வாம் மற்றும் பின்னர் ஒரு தனி கலைஞராக ஜார்ஜ் மைக்கேலின் இசைத்தட்டுகள் உலகெங்கும் பல மில்லியன் அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
1985களில் சீனாவில் முதன் முறையாக ஒரு மேற்கத்திய பாப் குழு இசை நிகழ்ச்சியை நடத்தி வரலாற்று சாதனையை வாம் படைத்தது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள ரசிகர்கள் இதை குறிப்பிட்டு நினைவு கூர்ந்துள்ளனர்.
லண்டனில் உள்ள ஜார்ஜ் மைக்கெலின் இல்லத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.