சிரியாவில் முக்கிய நகரை கைப்பற்ற அமெரிக்காவின் உதவியை நாடும் துருக்கி

வட கிழக்கு சிரியாவில் உள்ள ஒரு முக்கிய நகரிலிருந்து ஐ.எஸ் போராளிகளை விரட்டும் போரில் அமெரிக்க தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி ஆதரவு வேண்டி துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அத்தைகைய ஆதரவை இடைநிறுத்துவது என்பது கூட்டணிக்கு ஏற்புடையதல்ல என்று துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்துவனின் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

பல வாரங்களாக, துருக்கி ராணுவத்தின் ஆதரவோடு போராளிகள் சண்டையிட்டு ஐ.எஸ் குழுவிடமிருந்து அல்-பாப் நகரை கைப்பற்றினார்கள்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குமுன், சிரியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து, எல்லைப்பகுதியில் ஜிஹாதிகளுக்கு அப்-பாப் நகரம் ஒரு முக்கிய கோட்டையாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்