காங்கோவில் இரு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 35 பேர் பலி

  • 26 டிசம்பர் 2016

காங்கோ ஜனநாயக குடியரசின் வட கீவூ பிரேதசத்தில் உள்ள கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இரு வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காங்கோவில் இரு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 35 பேர் பலி

கடந்த ஞாயிறன்று, நண்டே என்ற போட்டி தீவிரவாத குழு நடத்திய பழிவாங்கும் தாக்குதலில் ஹூடூ பாரம்பரிய குழுவை சேர்ந்த 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

நேச ஜனநாயக படைகள் என்றழைக்கப்படும் உகாண்டாவின் இஸ்லாமியவாத குழு ஒன்று கடந்த சனிக்கிழமையன்று நடத்தியதாக கூறப்படும் வன்முறை சம்பவம் ஒன்றில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கிழக்கில் மோதல்களும், பிற பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், சமீப நாட்களாக காங்கோவில் பாதுகாப்பின்மை அதிகரித்துவிட்டது.

தனது பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையிலும், பதவி விலக மறுக்கும் அதிபர் ஜோசப் கபிலாவை எதிர்த்தும் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.