சீனாவின் முதல் விமானம் தாங்கியுடன் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ராணுவ பயிற்சி

சீனாவின் முதல் விமானம் தாங்கி, ராணுவப் பயிற்சிக்காக மேற்கு பசிபிக் கடற்கரைக்கு புறப்பட்டுள்ளது; இது ஒரு வழக்கமான பயிற்சி என்று சீன கடற்படை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption லிவெளனிங் முதல்முறையாக "தொலைதூர கடற்கரையில்" .

லிவெளனிங் முதல்முறையாக "தொலைதூர கடற்கரையில்" நிறுவப்பட்டுள்ளது என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பயற்சி குறித்த தகவல்கள், வழித்தடம் அல்லது கால நேரம் கொடுக்கப்படவில்லை.

சீனாவிலிருந்து பிரிந்து சென்ற மாகாணமாக சீனா கருதும் தன்னாட்சி தைவான் குறித்த பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை நடைபெறவுள்ளது.

"சனிக்கிழமையன்று, நீலக்கடல் பயிற்சிக்காக சீன கடற்படை விமானம் தாங்கியான லிவெளனிங் உட்பட சீன கடற்படை மேற்கு பசிபிக் கடலை நோக்கிச் சென்றுள்ளது" என கடற்படை செய்தி தொடர்பாளர் லியங் யாங் தெரிவித்ததாக சீன அரசு செய்தி முகமை ஷின்சுவா தெரிவித்துள்ளது.

ஜப்பானிய தீவுகளான மியாகோ மற்றும் ஒக்கினவவிற்கு இடையில் பசிபிக் பெருங்கடலை நோக்கி பாயும் நீர்படுகையான மியகோ நீர்படுகை வழியாக லிவெளனிங் சென்றுள்ளதால் அந்த ராணுவ நடவடிக்கையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது என ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

கிழக்கு சீன கடலின் மத்திய பகுதியில், போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் வல்லமை கொண்ட போர் கப்பல்கள் உட்பட எட்டு சீன போர் கப்பல்களின் ஒரு பகுதியாக லிவெளனிங்கையும் கண்டதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய கடற்கரைகளில் ஆக்கிரமிப்பு இல்லை எனவும் அது தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கொரிய தீபகற்பத்திற்கு அருகில் போஹாய் கடலில் லிவெளனிங் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

பிராந்தியங்களை சுற்றி அதிகாரத்தை வெளிப்படுத்தும் தங்கள் திறனை பெரிதாக நம்பும் கடற்படைக்கு இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ள சீனா, சண்டையில் ஈடுபட லிவெளனிங் நவம்பரில் தயாராகும் என சீனா அறிவித்துள்ளது;

பல தசாப்தங்களாக அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையை போன்று சிறப்பாக செயல்பட சீனாவிற்கு இன்னும் பல வருடங்கள் தேவைப்படும் என ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது

முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கதில், கொரிய தீபகற்பத்திற்கு அருகில் போஹாய் கடலில் லிவெளனிங் ஐந்து துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

பல அண்டை நாடுகளுடன் எல்லை சர்ச்சையில் இருக்கும் தென் சீனக் கடலில், சீனா தனது ராணுவத்தை அதிகரித்துள்ளது சர்சையை அதிகரித்துள்ளது.

சீனாவை கவலைக்குள்ளாக்கிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் தைவான் அதிபர் தொலைப்பேசி உறையாடலுக்கு மத்தியில் இந்த மேற்கு பசிபிக் ராணுவ பயிற்சி நடைபெறுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்