ரஷ்ய விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

ரஷ்ய விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

கருங்கடலில் ஞாயிறன்று காணாமல் போன தமது இராணுவ விமானத்தின் முதல் பதிவு கருவியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கரையில் இருந்து ஆயிரத்து அறுநூறு மீட்டர்கள் தொலைவில் அது கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுக்காக மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த இரவு மீட்பு குழு விமானத்தின் சில பகுதிகளை கண்டுபிடித்தது. பலியான தொண்ணூற்று இரண்டு பேரது சடலங்களை மீட்க பெருந்தேடுதல் நடக்கிறது.பன்னிரெண்டு பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.