'ஸ்டார் வார்ஸ்' புகழ் நடிகை கேரி ஃபிஷர் காலமானார்

ஸ்டார் வார்ஸ் திரைப்படத் தொடரில் 'இளவரசி லேயா' எனற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அமெரிக்க திரைப்பட நடிகை கேரி ஃபிஷர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, லண்டனில் இருந்து விமானத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் சென்ற போது கேரி ஃபிஷருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

விமானம் தரையிறங்கியவுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படங்களால் உலகப்புகழ் பெற்ற கேரி ஃபிஷர்

செவ்வாய்கிழமையன்று காலையில் கேரி ஃபிஷர் இறந்து விட்டதாக அவரது குடும்பம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரி ஃபிஷரின் மறைவுக்கு திரைப்படைத்துறையினர் உள்ளிட்ட பலரும் உலகெங்குமிலிருந்து தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்