சிரியா போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது: புதின்

  • 29 டிசம்பர் 2016

சிரியா அரசும் அதன் ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக் குழுவும் போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளதாகவும் ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை இரவு 10 மணியிலிருந்து இது அமலுக்கு வரும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

போர் புரியும் குழுக்கள் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் பலவீனமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்; ரஷியா, துருக்கி மற்றும் இரான் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியின் விளைவாக அந்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.

பல முக்கிய கிளர்ச்சியாளர்கள் குழவினர் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன; ஆனால் அதில் நுஸ்ரா குழுவினர் என்று அழைக்கப்படும் அமைப்பை சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என சிரியா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த அமைப்பு அல் கய்தாவுடனான தொடர்பை கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்