போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி சிரியாவில் தொடரும் மோதல்கள்

சிரியாவில் அரசாங்க படையினர் மற்றும் போராளிகளிடையே நள்ளிரவு முதல் அமலான ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி சில வான்வழித்தாக்குதல் மற்றும் அங்குமிங்குமாக மோதல்கள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மத்திய ஹாமா பகுதியில் வான்வழித்தாக்குதல்கள் நடந்து வருவதாக பிரிட்டனிலிருந்து இயங்கும் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகமானது தெரிவித்துள்ளது.

அவர்களுடைய இலக்குகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

நூஸ்ரா முன்னணியினர் என்று அறியப்படும் போராளிகள் உள்பட கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த டமாஸ்கஸுக்கு அருகே இருந்த பள்ளத்தாக்கிலும் மோதல் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நூஸ்ரா முன்னணியினர் முன்னர் அல்-கய்தா குழுவுடன் தொடர்பில் இருந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்