காங்கோவில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல்

  • 31 டிசம்பர் 2016

காங்கோ ஜனநாயக குடியரசில் அதிகரித்துவரும் அரசியல் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே போடப்பட்ட முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் கடைசி நிமிட தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மத்தியஸ்தர்களான பேராயர் மார்செல் உடெம்பி மற்றும் சென்கோ பொதுச் செயலாளர் அப்பாட் டோனெட்டியன்

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் ஜோசப் கபிலாவின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

ஆனால், அதிபர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான போராட்டங்களில் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளை சேர்ந்த மத்தியஸ்தர்கள் இது குறித்து, இருதரப்பினரும் ஒரு ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக வந்துள்ளதாகவும், அதன்படி 2017 ஆம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும் வரை கபிலா அதிபராக இருப்பார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், சில கருத்து வேறுபாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

மேலும், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவ ரும் நிலையில் கையெழுத்திடும் நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.