ஐ.நாவின் புதிய செயலர் டிரம்பின் அவநம்பிக்கையை முறியடிப்பாரா?

  • 1 ஜனவரி 2017

ஐ.நாவின் புதிய செயலராக பதவியேற்றுள்ள அண்டோன் யுகொடரிஷ், 2017 ஆம் ஆண்டு அமைதியின் ஆண்டாக அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர் பதவியேற்ற முதல் நாளில், சண்டையில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவி செய்வதே தனது முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உலகம் முழுவதும், அமைதியை பொருத்தே முன்னேற்றம் மற்றும் வளம் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போர்ச்சுகீசிய பிரதமரான அண்டோன் யுகொடரிஷ் தனது பதவி காலத்தில் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்க போவதாக உறுதியளித்துள்ளார்.

ஆனால் கடந்த வாரம் , மக்கள் பேசுவதற்கும் ஒன்று கூடி மகிழ்வதற்குமான ஒரு கிளப்பாக ஐ.நா மாறிவிட்டது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அவ நம்பிக்கையை அவர் முறியடிக்க வேண்டியுள்ளது.