இஸ்தான்புல் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம்

  • 1 ஜனவரி 2017

துருக்கி இஸ்தான்புல்லில் புத்தாண்டு தினத்தன்று இரவு விடுதி ஒன்றில் நடந்த தாக்குதலில் குறைந்தது 39 பேர் பலியாகியுள்ளனர். அதில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்; அந்த தாக்குதலுக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இரவு விடுதியிலிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தனி நபரை தேடி வருவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், இந்த தாக்குதல் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

இது கற்பனை செய்ய முடியாத ஒரு இழிந்த குற்றம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இது ஒரு "கொடூரமான பயங்கரவாத தாக்குதல்" என்று அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகை அச்சம் மற்றும் அதிர்ச்சி என்ற நிழலால் சூழுகின்ற இம்மாதிரியான வன்முறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று போப் ஃபிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்