அதிபர் தேர்தலில் தலையீடு: 35 ரஷிய அதிகாரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்

  • 2 ஜனவரி 2017

அதிபர் பராக் ஒபாமாவால் வெளியேற உத்தரவிடப்பட்ட 35 ரஷிய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேறியதாக ரஷிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக சிறப்பாக ரஷ்யாவிலிருந்து வந்த தனி விமானம்

அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக சிறப்பாக ரஷ்யாவிலிருந்து வந்த தனி விமானம் ரஷ்யாவிற்கு புறப்பட்டுச் சென்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்காக அவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஒபாமா ஆணையிட்டார்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை வெற்றிப் பெற வைப்பதற்காக ஜனநாயக்க் கட்சி மற்றும் கிளிண்டனின் பிரசார மின்னஞ்சல்களில் சட்ட விரோதமக ஊடுருவி மின்னஞ்சல்களை வெளியிட ரஷியா ஆணையிட்டதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவிக்கிறது.