இஸ்தான்புல் புத்தாண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது

  • 2 ஜனவரி 2017

இஸ்தான்புல்லில் உள்ள கேளிக்கையகத்தில் புத்தாண்டின் போது நடைபெற்ற படுகொலைகள் தொடர்பில் துருக்கியில் உள்ள பயங்கரவாத தடுப்பு போலிசார் 8 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்

இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலதாரியை போலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஐ.எஸ் குழுவை சேர்ந்த தீவிரவாதிகளில் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.எஸ் கூறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்