செயற்பாட்டாளரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக இரானில் மக்கள் போராட்டம்

சிறை வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தெஹ்ரானின் ஒரு சிறைக்கு வெளியே நூற்றுக்கணக்கான இரானியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக அராஷ் சதேகி 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு வழக்கில் தன்னுடைய மனைவிக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனை காலத்தை மீளாய்வு செய்ய வேண்டுமென கோரி 70 நாட்களுக்கு மேலாக அவர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

இரானில் கல்லெறிந்து தண்டணை வழங்கும் திரைப்படம் ஒன்றை பார்த்த பின்னர், முக்கிய கதாபாத்திரம் திருக்குரானை எரித்து விடுகின்ற பிரசுரிக்கப்படாத கதைக்காக கோல்ரோக் எப்ராஹிமி ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்