பாலஸ்தீனர்களுக்கு ஆயுதம் கடத்த உதவி, தண்டனை பெற்ற பேராயர் 94 ஆம் வயதில் மரணம்

  • 2 ஜனவரி 2017

பாலஸ்தீனர்களுக்கு ஆயுதங்களை கடத்த உதவியதாக சிறை தண்டனை பெற்ற, செசாரியாவின் முன்னாள் பேராயரான ஹிலாரியன் கப்பூச்சி மரணமடைந்திருப்பதை வத்திக்கான் உறுதி செய்திருக்கிறது. அவருக்கு வயது 94.

படத்தின் காப்புரிமை KARIM SAHIB/AFP/Getty Images

சிரியாவின் அலெப்போ நகரை சேர்ந்த கப்பூச்சி, பாலஸ்தீன மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற இயக்கங்களோடு தொடர்புடையவராக விளங்கினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கடத்த அவருடைய ராஜிய ரீதியான தகுதி நிலையை பயன்படுத்தி கொண்டதாக 1976 ஆம் ஆண்டு கிரேக்க மெல்கையிட் பாதிரியரான அவர் சிறை தண்டனை பெற்றார்.

வத்திகானின் தலையீட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், நாடு கடத்தப்பட்டார்.

இராக்கை சதாம் ஹூசேன் ஆண்டபோது, அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரும் முன்னாள் பேராயர் ஹிலாரியன் கப்பூச்சி என்பது குறிப்பிடத்தக்கது.